
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 1xBet நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது.