• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் புதிய டிராக்​டர் வாங்​கு​வோர் ரூ.42 ஆயிரம் வரை சேமிக்​கலாம் எனவும் ரூ.40 ஆயிரத்​துக்கு டிவி வாங்​கு​வோர் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்​கலாம் என்​றும் ஜிஎஸ்டி 2.0 சீர்த்​திருத்​தம் தெரிவிக்​கிறது. இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. இதையொட்டி தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்​தகத்தை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், சென்​னை​யில் நேற்று வெளி​யிட்​டார்.

அப்​போது அவர் கூறும்​போது, நீண்ட நாள் கோரிக்​கை​யான ஜிஎஸ்டி குறைப்பு என்​பது ஒவ்​வொரு குடிமக​னின் வெற்​றி​யாகும். தீபாவளிக்கு முன்பு இதை அமல்​படுத்த வேண்​டும் என பிரதமர் விரும்​பி​னார். ஆனால் நவராத்​திரிக்கு முன்பே வரி​குறைப்பு அமலாகும் என்​றார். ஜிஎஸ்டி 2.0 புத்​தகத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஜிஎஸ்டி வரி​குறைப்​பில் டிராக்​டர்​களுக்​கான ஜிஎஸ்டி என்​பது 12 சதவீதத்​தில் இருந்து 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *