• September 15, 2025
  • NewsEditor
  • 0

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.

தனுஷ் உடன் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இட்லி கடை இசை வெளியீடு

Dhanush பேசியது என்ன?

இட்லி கடை படத்துக்கும் தனது பால்யகாலத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிய தனுஷ், “இட்லி கடை என்ன டைட்டில், இன்னும் பவர்ஃபுல்லா வைத்திருக்கலாமே என்றார்கள். சில படங்களுக்கு படத்தின் ஹீரோ பெயரையே டைட்டிலாக வைப்பார்கள். இந்தப் படத்துடைய ஹீரோ அந்த இட்லி கடைதான். அதான் இந்த டைட்டில்.

ஒருநாள் நான், ஷ்ரேயஸ், அசோக் எல்லோரும் ஒரு மீட்டிங்குக்காக வெளிநாடு சென்றோம். அவர்கள் டின்னருக்கு வெளியே சென்றபோது நான் என் ரூமில் தனியாக இருந்தேன். தனியாக இருந்தால் எனக்குத் துணை இளையராஜா சார் பாட்டுதான். (நான் ஏரிக்கரை பாடலைப் பாடினேன்.) ஒரு சில பாடல்களுக்கு நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு ஞாபகத்தைக் கொடுக்கும் சக்தி உண்டு.

இட்லி கடை படக்குழு

இந்தப் பாடல் என்னை நான் சின்ன வயதில் விடுமுறைக்குச் சென்ற என் அம்மாவின் கிராமத்துக்கும் அங்கிருந்த பாட்டி வீட்டுக்கும் என்னைக் கூட்டிட்டுப் போச்சு. அந்தக் கிராமத்தில் ஒரு இரண்டு பஸ்தான் போகும். அங்கே ஒரே ஒரு இட்லிக் கடைதான் இருக்கும். அதில் சாப்பிட ஆசையாக இருக்கும், ஆனா காசு இருக்காது.

காலையில வயலில் பூ பறிக்க சொல்லுவார்கள். எவ்வளவு பூ பறிக்கிறோமோ அதுக்குத் தகுந்த கூலி. நான், என் அக்கா, கசின்ஸ் எல்லோரும் காலையில பூ பறிக்க போவோம். 2 – 2.30 மணிநேரம் பறிச்சா , ஆளுக்கு 2 ரூபா கிடைக்கும். அத வாங்கிட்டு அங்க இருக்கிற பம்பு செட்ல குளித்துவிட்டு துண்ட மட்டும் கட்டிகிட்டு ரோட்ல ‘தக் லைஃபா’ நடந்து வருவோம்.

தனுஷ்

அந்தக் கடையில எங்ககிட்ட இருக்குற காசுக்கு 4, 5 இட்லி வரும். உழைச்ச காசுல சாப்பிடுற அந்த 4,5 இட்லி தர்ற நிம்மதியும் சந்தோஷமும் நான் இதுவரை சாப்பிட்ட பெரிய பெரிய ரெஸ்டாரண்டில, ஃபேன்சியான ரெஸ்டாரன்டில் கிடைக்கல.

இந்த பாட்டு என்னை அந்த இட்லி கடைக்கு கூட்டிப்போகும்போதுதான், இந்த இட்லி கடையை வச்சு ஒரு படம் எடுக்கணும்னு எனக்குத் தோணுச்சு.

அந்த கடை மட்டுமில்ல, அந்த கிராமத்துல என் மனசை கவர்ந்த, என்னை பாதிச்ச கதாப்பாத்திரங்கள்ம், சென்னையில என்னை பாதிச்ச உண்மை கதாப்பாத்திரங்களை வச்சு செய்த ஒரு கற்பனையான கதைதான் இந்த இட்லி கடை.” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *