
சென்னை: வடபழனி முருகன் கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு அக்.13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகன் கோயில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக சென்னை வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சட்டப்பிரிவு, 46(3)ன் கீழ் பட்டியலை சேர்ந்தது. துணை ஆணையர், செயல் அலுவலர் நிலையிலும், தக்காராலும் நிர்வாகம் கவனித்து வரப்படுகிறது.