
புதுடெல்லி: இந்தி, இந்திய மொழிகளின் நண்பன் என்றும் போட்டி அல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது இந்தியா அடிப்படையில் மொழி சார்ந்த நாடு. நமது மொழிகள் கலாச்சாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகின்றன.