• September 14, 2025
  • NewsEditor
  • 0

இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமிருக்காது. இன்று நடக்கும் இந்தப் போட்டியானது இன்னும் ஸ்பெஷலானது.

எதிர்ப்புகள்

காரணம், கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு & காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி ‘ஆபரேஷன் சிந்தூர்’. இதன் பின், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் முதல் போட்டி இது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

இந்தப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று பல எதிர்ப்புகள் எழுந்தன. இந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது.

இருந்தும், இந்தப் போட்டிக்கு எதிரான எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகின்றன.

‘இது தேசிய உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமானம்’ என்று உத்தவ் சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்.

இந்தியா Vs பாகிஸ்தான்

இத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி தான், இன்று இரவு 8 மணிக்கு துபாயில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

இந்தியா சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலும், பாகிஸ்தான் சல்மான் ஆஹா கேப்டன்சியிலும் களமிறங்குகிறது.

இந்த லீக்கில், இந்தியா ஏற்கெனவே தனது முதல் லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றிருந்தது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

அதே மாதிரி, பாகிஸ்தானும் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஓமனை வென்றிருந்தது. ஆக, இரு அணிகளின் தொடக்கமுமே நன்றாகத்தான் இருந்திருக்கிறது.

அதனால், இன்று நடைபெறும் போட்டி எப்படி இருக்கும் என்ற ஆவல் வெகுவாக எழுந்திருக்கிறது.

இன்று களத்தில் எந்த அணி வெற்றிபெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆல் தி பெஸ்ட் இந்தியன் டீம்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *