
பரெய்லி: உ.பி. பரெய்லியில் இந்தி நடிகை திஷா பதானியின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் 2 மர்ம நபர்கள், பதானியின் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. ஆன்மிக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த கும்பல் தெரிவித்திருந்தது.