
ஒவ்வாமை ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஒன்று, அடுக்குத்தும்மல். அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்; ஒவ்வாமையைத் தவிர்ப்பது எப்படி..? விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாலகுமார்.
1. காற்று மாசுபாடு, போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், வைப்பர் பொருத்திய ஹெல்மெட்டுகளைப் (Wiper Helmet) பயன்படுத்தலாம்.
2. படுக்கை விரிப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாய்ப்பிருந்தால், போர்வைகளை வெந்நீரில் அலசலாம். வாரம் ஒரு முறை படுக்கைகளையும் திரைச்சீலைகளையும் கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும்.

3. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது உங்கள் துணி, தலைமுடி, நீங்கள் அணிந்த செருப்பு அல்லது ஷூவில் ஒளிந்திருக்கும் ஒவ்வாமையைத் தூண்டும் ஒட்டுண்ணிகள் உங்களுக்குப் பிரச்னையைத் தரலாம். எனவே, வீடு திரும்பியதும் வியர்வை அடங்கும்வரை ஓய்வெடுக்க வேண்டும். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.
4. அறைகளில் அழுக்குத்துணிகளைச் சேமித்து வைப்பது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்பதால், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. செருப்பு, ஷுக்களை வீட்டின் உள்ளே கொண்டுவரக் கூடாது.
5. வீட்டைவிட்டு வெளியே செல்லும் நேரங்களில், `மாஸ்க்’ அணிந்துசெல்வது நல்லது. இவை தவிர, எத்தகைய சூழல் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி, தொடர்ச்சியான தும்மலைத் தருகிறது என்பதைக் கண்டறிந்து, முடிந்தவரை அதைத் தவிர்க்க வேண்டும். தேவையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னரே, மருத்துவரின் ஆலோசனையுடன் ஒவ்வாமைத் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…