
சென்னை: கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவிக்கும் அரசு மருத்துவர் மீது துறைரீதியாக மட்டுமின்றி, காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் `நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் மக்களுக்கான இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழினை வழங்கினார்.