
கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கோவையில் தொழில் வளம் சிறப்பாக இருந்தது. 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணியாற்றினர். தற்போது ஒரு ஷிப்ட்டில் மட்டும்தான் பணியாற்றுகின்றனர். அதிமுக ஆட்சியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு பணிகள் முடிவு பெறும் நிலையில், திமுக ஆட்சியில் திட்டம் முடங்கிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் விமான நிலைய விரிவாக்கப்பணி முடிக்கப்படும்.