
இம்பால்: மணிப்பூர் மக்கள், அமைப்புகள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி – குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இதில் 258 பேர் உயிரிழந்தனர். 1,108 பேர் காயமடைந்தனர். 400 தேவாலயங்கள், 132 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்தது.