
இம்பால்: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கி, நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்புக்கு வழி வகுப்பார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள இளைஞர்கள் சாலைகளை சுத்தம் செய்து வண்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். அவர் பேசும்போது, "நேபாளம் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு. அதன் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.