
சுராசந்த்பூர்: “மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மணிப்பூரின் அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும்.”என்று அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023-ல் நடந்த இனக்கலவரம், அம்மாநிலத்தின் குகி – மேத்தி சமூகத்தினரிடையே பிளவை அதிகரிக்கச் செய்தது. இதனால், அம்மாநிலத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. நிலைமையை சரி செய்ய மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இனக்கலவரம் ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக இன்று மணிப்பூருக்குச் சென்றார்.