• September 13, 2025
  • NewsEditor
  • 0

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய் நா வரேன் ” என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மரக்கடை பகுதியில் தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார்.

எல்லோருக்கும் வணக்கம் நான் பேசுறது கேக்குதா என்று தனது பரப்புரையை திருச்சியில் தொடங்கினார் விஜய். “ஜனநாயக போருக்கு தயாராக முன்பு மக்களை பார்க்க வந்துள்ளேன். நல்ல காரியத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன்.

திருச்சியில் இருந்து தொடங்கினால் திருப்புமுனையாக அமையும். அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும், எம்ஜிஆர் முதல் மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார். தவெக தொண்டர்களை பார்க்கும்போது பரவசமாகவும் உணர்ச்சிவசமாகவும் உள்ளது என்று உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *