• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்மை பணி​யாளர்​களுக்கு 3 வேளை​யும் இலவச உணவு வழங்​கும் திட்​டத்​துக்​காக ரூ.150 கோடியை ஒதுக்​கீடு செய்​து,மாநக​ராட்சி டெண்​டர் கோரி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலத்​துக்​குட்​பட்ட தூய்மை பணியை தனி​யாரிடம் ஒப்​படைத்​தது மாநக​ராட்​சி. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அந்த இரு மண்​டலங்​களை சேர்ந்த தூய்மை பணி​யாளர்​கள் தொடர்ந்து 13 நாட்​களாக மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் அவர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டு, அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இச்​சம்​பவம் தமிழகம் முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இதற்கு பல்​வேறு கட்​சிகளும், அமைப்​பு​களும் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் ஆக.14-ம் தேதி நடந்த அமைச்​சரவை கூட்​டத்​தில் தூய்மை பணி​யாளர்​கள் நலனுக்​காக 6 சிறப்பு திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *