
சென்னை: சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடல் தானம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உடல் தானம் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தலைவர் பெ.சண்முகம் முதல் நபராக உடல் தானம் செய்த உறுதி மொழி படிவத்தை வழங்கினார்.