
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சி.வி.ராமன் நகரை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவதை போன்ற வீடியோ ஒன்றை பார்த்தேன்.
அதில் குறிப்பிட்ட பங்கு சந்தையில் 250 அமெரிக்க‌ டாலர் (சுமார் ரூ.22 ஆயிரம்) முதலீடு செய்தால் அதிக அளவிலான வட்டியுடன் சேர்த்து, பணத்தை 100 நாட்களில் திரும்ப பெறலாம் என கூறப்பட்டிருந்தது.