
விழுப்புரம்: தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை சார்பில், ‘இந்திய குடியரசின் சாதனை கள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தின் நோக்கம் என்னவோ, அதுவே ஆரோவில் நோக்கமாகும். 75 வருட குடியரசு நாட்டில் நமக்கு கிடைத்தது என்ன? கிடைக்காதது என்ன? என்பதை யோசிக்க வேண்டும். 2014-ம் ஆண்டுக்கு முன்பும், பின்பும் என நமது நாட்டின் வளர்ச்சியைப் பிரிக்கலாம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும்.