
சென்னை: மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பித்து கடந்த ஜூன்மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதில் சுமார் 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால் குறைந்தது 5,000 மினி பேருந்துகள் தேவைப்படுகின்றன.