
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம் இணைந்த ஒரு கோடி குடும்பத்தினர் செப்.15-ம் தேதி பல்வேறு கருத்துகளை முன்வைத்து உறுதிமொழி ஏற்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம், தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் தோறும் 30 சதவீதம் வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக்கும் திட்டத்தை கடந்த ஜூலை 3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.