
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.