• September 12, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல வாய்ப்​புள்​ள​தால், அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்டு வருகின்றன. பிரதமர் மோடி கடந்த சில நாட்​களாக பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்​களில் மழை, வெள்​ளம், மற்றும் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட பகுதிகளை பார்​வை​யிட்டு ஆய்வு செய்தார். இந்​நிலை​யில் நேற்று உத்​த​ராகண்ட் சென்று வெள்ள பாதிப்பு பகு​தி​களை பார்​வை​யிட்​டார்.

மணிப்​பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி மற்​றும் மைத்​தேயி இனத்​தினர் இடையே ஏற்​பட்ட மோதல் பயங்கர கலவர​மாக தொடர்ந்​தது. இதில் 250-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். இந்த கலவரத்​துக்​குப்​ பின் பிரதமர் மோடி மணிப்​பூர் செல்​ல​வில்​லை. இந்​நிலை​யில் மிசோரம் மாநிலத்​திலிருந்​து, பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளியாகியுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *