
சென்னை: மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம், 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், இதன் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில், சென்னை கிண்டியில் நேற்றுநடந்தது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அப்போலோ மருத்துவர்களைப் பாராட்டினார்.