• September 12, 2025
  • NewsEditor
  • 0

ராகவா லாரன்ஸ் தற்போது ‘பென்ஸ்’, ‘ஹண்டர்’, ‘புல்லட்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ‘காஞ்சனா 4’ படத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கவும் இருக்கிறார்.

திரைத்துறையைத் தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது வீட்டை இலவச கல்வி பள்ளியாக மாற்றி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ்

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியிருக்கும் ராகவா லாரன்ஸ்:

“காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறேன்.

இந்த படத்திற்கான முன்பணத்தை வைத்து, எனது முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்.

உங்கள் பலருக்கும் தெரியும், என்னுடைய படங்களுக்கு நான் ஒவ்வொரு முறையும் முன்பணம் பெற்ற பின் ஒரு நல்ல காரியம் செய்வேன்.

அந்த வகையில் இந்த முறை, எனது முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவசக் கல்விப் பள்ளியாக மாற்றியிருக்கிறேன்.

இந்த வீடு எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் நான் டான்ஸ் மாஸ்டராக இருந்த போது, என்னுடைய சேவிங்ஸில் இருந்து வாங்கிய முதல் வீடு. பின்னர் அதை ஒரு அனாதை இல்லமாக மாற்றினேன்.

அப்போது நானும் என் குடும்பமும் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். ஆனால் இன்று, என் குழந்தைகள் வளர்ந்து வேலை செய்யும் அளவிற்கு வந்துள்ளனர்.

இந்த வீட்டை மீண்டும் ஒரு நல்ல நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த பள்ளியில் நான் நியமிக்கும் முதல் ஆசிரியர், என் அறக்கட்டளையில் வளர்ந்த பெண்.

அவர் இப்போது படித்த படிப்பை திரும்பி சொல்லக் கொடுக்க தயாராக இருக்கிறார்.

இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இந்த புதிய முயற்சிக்கு உங்களது அனைவரின் ஆசீர்வாதங்களும் எனக்கு தேவை.

நீங்கள் எப்போதும் போல, தொடர்ந்து எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *