• September 12, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

சாலைகளில் மழை நீர் ஆங்​காங்கே தேங்​கிய​தில் முக்​கிய சாலைகள் உட்பட பல இடங்​களில் வெள்​ளம் போல் காட்​சி​யளிக்​கிறது. இதனால் வாகன ஓட்​டிகள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி உள்​ளனர். விஜய​வாடா – ஹைத​ரா​பாத் தேசிய நெடுஞ்​சாலை​யில் மழை காரண​மாக போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *