
சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சதர்கள் தரப்பிலும், சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கனக சபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், வார நாட்கள், வார விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் எவ்வளவு பேர் தரிசனம் மேற்கொள்ள முடியும் என்பது குறித்து களஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.