
இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருப்பதாக, இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பதிவிட்டிருந்தனர்
நேற்று பீகாரில் பேசிய இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், “வரும் நவம்பர் மாதத்திற்குள், இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் முடியும். இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இரு தரப்புமே திருப்திகரமாக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
லுட்னிக் பேசியது என்ன?
இந்த நிலையில், நேற்று நேர்காணல் ஒன்றில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
கேள்வி
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்று ஏற்கெனவே இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க இரண்டாம் கட்ட நடவடிக்கை வேறு எடுக்கப்பட உள்ளது என்று அமெரிக்கா சொல்லி வருகிறது. அந்த நடவடிக்கை இந்தியா மீதும் எடுக்கப்படுமா என்கிற கேள்வி இருந்து வருகிறது.
ஆனால், இப்போது வரை, ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்து வருகிறது.
அடுத்து என்ன நடக்குமோ?!