• September 12, 2025
  • NewsEditor
  • 0

எல்லாக் கட்சிகளிலும் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என காங்கிரஸ் தலைமை நினைத்துவிட்டது போலிருக்கிறது. அதனால், ஒரே சமயத்தில் கோவையில் மூன்று மாவட்டத் தலைவர்களுக்கும் மொத்தமாக விடை கொடுத்திருக்கிறது. காரணம் ஒன்றும் புதிதல்ல… வழக்கமான கோஷ்டி அரசியல் தான்.

தமி​ழ​கத்​தில் காங்​கிரஸ் கொஞ்​சம் சத்​தாக இருக்​கும் மாவட்​டங்​களில் கோவை​யும் ஒன்​று. கோவை மாநகர், கோவை வடக்​கு, கோவை தெற்கு என கோவை மாவட்ட காங்​கிரஸ் மூன்று மாவட்​டங்​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. மாநகர் மாவட்​டத் தலை​வ​ராக வழக்​கறிஞர் கருப்​பு​சாமி​யும், வடக்கு மாவட்​டத் தலை​வ​ராக வி.எம்​.சி.மனோகரனும், தெற்கு மாவட்​டத் தலை​வ​ராக என்​.கே.பகவ​தி​யும் இருந்​தனர். இவர்​கள் மூவரை​யும் தான் அண்மையில் பொறுப்​பிலிருந்து விடு​வித்​திருக்​கிறது காங்​கிரஸ் தலை​மை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *