• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கூட்​டுறவு சங்​கங்​களின் கூடு​தல் பதி​வாளர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் தாயு​மானவர் திட்​டத்​தின் கீழ், 70 வயதுக்குமேற்​பட்ட மூத்த குடிமக்​களை மட்​டுமே கொண்ட குடும்ப அட்​டை​தா​ரர்​கள் மற்​றும் மாற்றுத் திற​னாளி குடும்ப அட்​டை​தா​ரர்​கள் வீடு​களுக்கே சென்​று, செப்​டம்​பர் மாதத்​துக்​கான பொது விநி​யோகத் திட்ட பொருட்கள் வரும்13 முதல் 16-ம் தேதிவரை விநி​யோகிக்​கப்பட உள்​ளன. சம்​பந்​தப்​பட்ட நியாய விலைக் கடைகளின் அறி​விப்​புப் பலகையி​லிருந்து விநி​யோகத் தேதியை அறிந்​து​கொள்​ளலாம்.

இதில் செப்​.13, 14, 15 ஆகிய 3 நாட்​களில்மாதவரம், தேனாம்​பேட்​டை, கோடம்​பாக்​கம், வளசர​வாக்​கம், அடை​யாறு, பெருங்​குடி மற்றும் சோழிங்​கநல்​லூர் பகு​தி​களி​லும், செப்​.13 முதல் 16 வரை 4 நாட்​களும் திரு​வொற்​றியூர், மணலி, தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு.​வி.க. நகர், அம்​பத்​தூர். அண்ணா நகர்மற்​றும் ஆலந்​தூர் பகு​தி​களி​லும் வீடு​வீ​டாக ரேஷன் பொருட்​கள் வழங்கப்படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *