
மறைமலை நகர் / குன்றத்தூர்: திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிளை, வார்டு, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று மறைமலை நகரில் நடைபெற்றது:- கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: