டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator – Male’, `Best Solo Creator – Female’, `Best Couple Creator’ என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
SPECIAL MENTION (BEST CREATOR)
அனைவரும் பொருந்திப் பார்க்கக் கூடிய கன்டென்ட்களைக் தொடர்ந்துக் கொடுக்கும் கில்லாடிகள் மல்லேஷ் கண்ணனும், பால முருகனும்தான் ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

SPECIAL MENTION (BEST CREATOR) – MALLESH KANNAN, S BALAMURUGAN
`அசட்டுத் தனம்’ கலந்த நகைச்சுவையைக் கையாள்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் கலாய் மெட்டீரியல் ஆகிவிடும் ஆபத்திருக்கும் இந்த இரு முனைக் கத்தியைத் தயக்கமின்றி வீசி வெற்றி வாகை சூடியிருக்கிறது மல்லேஷ் கண்ணன்-பாலமுருகன் இணை! கியூட்டான ஃப்ரெண்ட்ஷிப் உரையாடல்தான் கன்டென்ட் என்றாலும் இந்தக் குழு வித்தியாசப்படுவது அதிலிருக்கும் உள்ளடக்கத்தில்தான்!

நகைச்சுவையின் பரிமாணங்கள் மாறினாலும் எமோஷன் ஒன்றுதான் என்பதைத் திறம்பட நிரூபித்து வரும் இந்தத் தன்னம்பிக்கைக்காரர்களுக்கு BEST CREATOR – SPECIAL MENTION சிறப்பு விருதை வழங்கி உற்சாகப்படுத்துகிறது விகடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…