• September 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2023 மற்​றும் 2024 ஆகிய 2 ஆண்​டு​களில் மட்​டும் 1,000 கிலோ தங்​கம் சீன எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வுக்​குள் கடத்தி வரப்​பட்​டது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இதன் மதிப்பு ரூ.800 கோடி​யாகும். சீன எல்லை வழி​யாக இந்​தி​யா​வுக்​குள் தங்கம் கடத்தி வரும் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் சீனர்​கள், திபெத்​தி​யர்​களுக்கு தொடர்பு இருப்​பதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய – சீனா இடையே 3,488 கி.மீ. உண்​மை​யான எல்​லைக் கட்​டுப்​பாட்டு கோட்​டரு​கில் இந்தோ – திபெத் எல்​லைப் போலீ​ஸார் ரோந்துப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அதன்​படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக் பகு​தி​யில் இந்தோ – திபெத் எல்​லைப் போலீ​ஸார் தீவிர ரோந்துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *