
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம் துறை செயலர்களுக்கு சில விளக்கங்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஜெயராஜ ராஜேஸ்வரன், பி.பிரெட்ரிக் எங்கெல்ஸ், மு.செல்வகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் (எண் 309) அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.