
சென்னை: சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் 5,640 எண்ணிக்கையிலான 8 கிராம் 22 காரட் தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் கொள்முதல் தொடர்பாக விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழக அரசின் ஒப்பந்தப் புள்ளி கோரும் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அக்.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளிகள் அக்.9-ம் தேதி மாலை 4 மணியளவில் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.