
சென்னை: கன்னியாகுமரி விவேகானந்தர் சிலை – திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடிப்பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நேற்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.