
சென்னை: ஜிஎஸ்டி குறைப்பின் பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஜிஎஸ்டி 4 அடுக்கு வரியாக விதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையாக மாறியிருந்தது. இந்நிலையில் பிரதமர் அறிவித்தபடி வரி சீர்திருத்தம் மூலம், ஈரடுக்கு வரியாக மாற்றி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனாலும், இந்த வரி குறைப்பு பொதுமக்களையும், நுகர்வோரையும் சென்றடைய வேண்டும்.