
இந்தியக் குடியரசின் புதிய துணை குடியரசுத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் அரங்கில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அவரது தேர்வு, தமிழகத்தின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தச் செய்தி வெளியானதும், பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தமிழ் சினிமா உலகின் முக்கியப் புள்ளியும், நடிகரும், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனருமான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தன் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவரின் பதிவில், “மாண்புமிகு திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறப்பான நிர்வாகத் திறமை, எளிமை மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு கொண்ட ஒரு தலைவர், இந்த உயரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது தமிழ்நாட்டிற்குப் பெருமைக்குரிய தருணம். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
இவரது தலைமை மற்றும் ஞானத்தின் கீழ், தேசத்திற்கு அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவையாற்றுவதில் அவர் சிறந்து விளங்குவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்தப் புதிய பொறுப்பில் அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற எனது வாழ்த்துக்கள்.

அவர் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவதன் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அவரது வெற்றி, தமிழ்நாட்டின் தலைவர்கள் தேச அளவில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…