
ராமேசுவரம்: இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிபகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம் சேதமடைந்தது. 1995-ல் விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்த துறைமுகம் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.