
சென்னை: ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்துக்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.