• September 10, 2025
  • NewsEditor
  • 0

வெளிநாட்டு வேலை என்றாலே ‘அட, சூப்பர்…’ என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால், கண் காணாத ஒரு நாட்டில் மனைவி, மக்களைப் பிரிந்து, கிடைத்த உணவை சாப்பிட்டு, கடும் வெயிலிலும் பனியிலும் வாழ்பவர்களுக்குத்தான் வெளிநாட்டு வேலை என்பது சூப்பரா, இல்லையா என்பது தெரியும்.

பொதுவாக வெளிநாட்டில் வேலை என்று வரும்போது, இந்தியாவை விட கொஞ்சம் அதிகமான வருமானம் கிடைக்கவே செய்யும். இந்த அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டுத்தான் பலரும் பல விதமான கஷ்டங்களை அனுபவித்து பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கிறார்கள்.

இப்படிக் கஷ்டப்பட்டு வேலை பார்த்து கிடைக்கும் பணத்தை அவர்கள் என்ன செய்கிறார்கள், தங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தை எப்படி சேர்க்கிறார்கள், குறிப்பாக, ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படி சேர்க்கிறார்கள் என்கிற கேள்விகள் எல்லாம் முக்கியமானவை.

தங்கம்

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தமிழர்கள் பெரும்பாலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வங்கி எஃப்.டி.யில் போட்டு வைக்கிறார்கள். வங்கி எஃப்.டி என்பது பாதுகாப்பானது என்றாலும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் அதில் கிடைப்பதில்லை.

அடுத்து, நம் ஊர் மக்கள் அதிகம் நாடும் விஷயமாக இருப்பது, தங்கமும், ரியல் எஸ்டேட்டும். ரியல் எஸ்டேட் என்பது தற்போது விலை மிகுந்ததாக இருக்கிறது. இதனால் இப்போது அதிக விலை தந்து வாங்கும் இடத்தின் மதிப்பு உயர்ந்து, எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அதே போல, தங்கம் இப்போது அதிக விலையேற்றத்தில் இருந்தாலும், எதிர்காலத்திலும் தற்போது போல அதிக லாபம் தருமா என்பது கேள்விக்குறிதான்.

Bagavathi

அப்படியானால், வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை எப்படி சேர்க்கலாம், குறிப்பாக, ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படி சேர்ப்பது என்பது குறித்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களிடம் எடுத்துச் சொல்ல ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மீட்டிங் வருகிற சனிக்கிழமை அன்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நடக்கும். இந்த மீட்டிங்கில் பேசவிருக்கிறார் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவின் வைஸ் பிரசிடென்ட் பகவதி சுப்பிரமணியம்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்,

 இந்த லிங்க்கினை சொடுக்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்தை சரியாகத் திட்டமிட்டுக்கொண்டு முதலீடு செய்ய நினைத்தால், இந்தக் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளலாம்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *