
”இது எய்ட்ஸ் அதிகரித்துவிட்ட காலகட்டம். முன் எப்போதையும்விட ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகப் பார்க்கிறேன். காரணம் ஹேப்பி எண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே கிடைக்கிற செக்ஸ் வாய்ப்புகள்.
ஹெச்.ஐ.வி தொற்று தவிர்க்கப்பட வேண்டுமென்றால், தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
”ஒரு தம்பதியரிடையே தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே ஆகிய மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியம்.
தாம்பத்திய உறவுக்கு முந்தைய ஃபோர் பிளே எரிச்சல், வலி இல்லாத தாம்பத்திய உறவு நிகழ்வதற்கு உதவும். ‘ஃபோர் பிளே’வில் கணவன், மனைவி இருவருமே பங்கு பெற வேண்டுமா என்றால், ஆமாம். இதைக் கற்றுக்கொண்டுதான் செய்ய வேண்டும்.
அடுத்தது பிளே . அதாவது, தாம்பத்திய உறவு. இதில் இருவரும் உச்சக்கட்டம் அடைவதுதான் முக்கியம். பெண்ணைத் திருப்திப்படுத்துவது தொடர்பாக ஆணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கணவனை எப்படித் தூண்டுவது என்பது மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்கள் மோட்டார் ஸ்விட்ச் போடுவதுபோல உச்சக்கட்டம் அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண் அடையும் உச்சக்கட்டம் என்பது விமானத்தில் இருக்கிற ஸ்விட்ச்களைப் போன்றது.
அவர்களின் உடலில் உச்சக்கட்டம் அடைவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றைத் தூண்டாமல் பெரும்பாலான பெண்களால் வெறும் செக்ஸ் மூலமாக மட்டுமே உச்சக்கட்டம் அடைய முடியாது. இதுதான் உண்மை.
மூன்றாவதாக, ஆஃப்டர் பிளே. இருவருமே உச்சக்கட்டம் அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை அது நிகழவில்லை என்றால் ஆஃப்டர் பிளே கட்டாயம்.
ஃபோர் பிளே தெரிந்த அளவுக்கு பலருக்கும் ஆஃப்டர் பிளே பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சொல்கிறேன்.
இந்த நேரத்தில் ரொமாண்டிக்காகப் பேசுதல், கூந்தலை வருடுதல், அணைத்தல், தழுவுதல் போன்று செய்யலாம்.
காமசூத்ரா கொடுத்த நாட்டில், முறையான செக்ஸைப்பற்றி தெரியவில்லையென்றால், அது விவாகரத்தில் முடிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தவிர, தம்பதியரிடையே உறவு சரியாக இருந்தால், மூன்றாவது நபர் குறுக்கீட்டால் எதுவுமே செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…