
கிராமப் பெரியவர்கள் தீர்மானம்
திருமணம் என்றாலே இப்போது கோடிகளில் செலவு செய்வது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக பணக்காரக் குடும்பங்களில் திருமண விழா நடத்தும் போது, ஆடம்பரமாக கோடிகளைச் செலவழிப்பது உறுதியே.
ஆனால், இந்தச் செலவு பல குடும்பங்களை கடனாளிகளாக ஆக்குகிறது. திருமண விருந்துக்கே பல லட்சங்கள் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சின்ச்வால்கர்வாடி என்ற கிராமத்தில் ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
சின்ச்வால்கர்வாடி கிராம்
மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டம் சின்ச்வால்கர்வாடி கிராமத்தில் திருமணச் செலவுகளை கட்டுப்படுத்த கிராமப் பெரியவர்கள் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர்.
இதன்படி, திருமணத்தில் ஆடம்பர செலவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன் நடைபெறும் மஞ்சள் வைக்கும் சடங்கில் மது வழங்குவதும், அசைவ உணவு பரிமாறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுபவர்களின் திருமண விழாவில் கிராம மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, மும்பை போன்ற நகரங்களில் நடைபெறும் திருமணங்களிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணச் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிராமப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும் என்பதால், கிராம மக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…