
இந்தியாவில் பணிபுரியும் விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் அல்லது அல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகளைத் தவிர்ப்பது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணம் உள்ளது.
விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் தோமர் அவ்தேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதுகுறித்து விளக்கியிருந்தார். DGCA (Directorate General of Civil Aviation) விதிகளின் படி, ஒவ்வொரு விமானியும் பறப்பதற்கு முன் breathalyser சோதனை செய்யப்பட வேண்டும். இந்தச் சோதனை, விமானியின் உடலில் மதுபானம் உள்ளதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது.
மிகச் சிறிய அளவிலான ஆல்கஹால் கூட சுவாசத்தின் மூலம் கண்டறியப்படுவதால், பர்ப்யூம் அல்லது சானிடைசர் போன்றவற்றின் வாசனை கூட சோதனையில் தவறான முடிவுகளை உருவாக்கக்கூடும்.
இவ்வாறு சோதனையில் சிக்கினால், அந்த விமானி உடனடியாக நீக்கப்படுவார் (grounded). இதனால், திட்டமிட்ட விமானச் சேவை தாமதமடையக்கூடும். மேலும், விதிமுறைகளை மீறியதாகக் கருதி ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, விமானிகள் பறப்பதற்கு முன் பர்ப்யூம், டியோடரண்ட் போன்ற ஆல்கஹால் கலந்த பொருட்களைத் தவிர்க்கிறார்கள். சிலர் சோதனை முடிந்த பின்பே இத்தகைய வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
பர்ப்யூம் தவிர்ப்பது போன்ற எளிய பழக்கங்கள் கூட, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!