
சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம்.