
சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீ்திமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூசிவாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் அப்பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இக்கடையில் கடந்த ஜூலை மாதம் கேக் வாங்கி சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடை உரிமையாளரான சிவக்குமாருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.