• September 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது.

டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு பகு​தி​களை பார்​வை​யிட நேற்று மாலை இமாச்​சல் பிரதேசம் புறப்​பட்​டார். நேற்று மதி​யம் 1.30 மணி​யள​வில் காங்​கரா பகு​திக்​கும் வந்த பிரதமர் மோடி மண்​டி, குல்லு ஆகிய மாவட்​டங்​களில் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு பாதிப்பு பகு​தி​களை ஹெலி​காப்​டரில் சென்று பார்​வை​யிட்​டார். அதன்​பின் மாநில உயர் அதி​காரி​களை சந்​தித்து ஆலோ​சனை கூட்​டம் நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *