
பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜிடம் கேட்டபோது, “ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட் வாங்கி, திரையரங்கங்களுக்கு வந்து அந்த அனுபவத்தை உணர்பவர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், மக்கள் 'ஆடுஜீவிதம்' படத்துக்கு ஏற்கெனவே மிகப்பெரிய விருதை வழங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.