
கோவை: டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்தார்.
இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.