• September 10, 2025
  • NewsEditor
  • 0

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்களில் ‘நெட்டி முறிக்கும்’ வழக்கம் பலருக்கும் இருக்கும். சிலர் இதை ‘சொடக்கு எடுத்தல்’ என்றும் சொல்வார்கள்.

நெட்டி முறிக்கும்போது, எழும் சத்தம் தான் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி கிடைத்த உணர்வை ஏற்படுத்துகிறது.

அடிக்கடி நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல என்கிற எலும்பியல் மருத்துவர் ஆசிக் அமீன், அதுபற்றி விவரிக்கிறார்.

நெட்டி முறித்தல்

விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது.

நீண்டநேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும்.

நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது.

தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும்.

நெட்டி முறிக்கும்போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது.

நெட்டி முறித்தல்
நெட்டி முறித்தல்

சைனோவியல்தான் நம் கை மற்றும் கால் விரல் இணைப்புகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் ஒத்திசைவாகச் செயல்பட உயவு திரவமாகச் செயல்படுகிறது.  அடிக்கடி நெட்டி முறிக்கும்போது இந்தத் திரவம் குறைகிறது.

மேலும், கை விரல்களில் டென்டன், லிகமென்ட், கேப்ஸ்யூல் என மூன்று அமைப்புகள் உள்ளன. அடிக்கடி ஒருவர் நெட்டி முறிக்கும்போது இவை மூன்றும் வலுவிழந்து விரல்கள் பலவீனமடையக்கூடும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி கை விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டே இருந்தால், கைகளில் பிடி வலிமையின்றிப் போவது, முழங்கை வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

சொடக்கு எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்தவேண்டியது அவசியம்.

நெட்டி முறிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், கைகளுக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம்.

தொடர்ந்து டைப் செய்வது போன்று ஒரே மாதிரியான வேலையைக் கைகளுக்குக் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் விரல்களில் நெட்டி முறிப்பதற்கு பதில், விரல்களுக்கு அவ்வப்போது இரண்டு நிமிடம் ஓய்வு எடுக்கலாம்.

தவிர, எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த பால், முட்டை, கேழ்வரகு, கீரைகள், எள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால், நீண்ட நேரம் வேலை செய்தாலும் கை விரல்கள் வலிக்காது. நமக்கும் விரல்களில் நெட்டி முறிக்கவோ அல்லது சொடக்கு போடவோ தோன்றாது” என்கிறார் டாக்டர் ஆசிக் அமீன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *