
புதுடெல்லி: நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “இன்றைய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது. பல இளைஞர்கள் உயிரிழந்திருப்பது என் இதயத்தை மிகவும் வருத்தப்படுத்துகிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர சகோதரிகளும் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் பராமரிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.